விடுதி சிறுவன் மாயம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் சூரியநாராயணன் தெருவில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி பயில்கின்றனர். இங்கிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் ராஜ்குமார் என்ற 14 வயது சிறுவன் நேற்று விடுதியிலிருந்து மாயமானான். இதுகுறித்து விடுதி கண்காணிப்பாளர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில சிறுவனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>