×

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

சென்னை : திருச்சியை சேர்ந்தவர் பாலாஜி (23). சென்னை பட்டினப்பாக்கத்தில்  குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சிக்கு புறப்பட்டார்.  அப்போது, ரயில் படியில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சைதாப்பேட்டை அருகே ரயில் சென்றபோது, பாலாஜி தடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இறந்தார்.

Tags :
× RELATED கொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது