×

திருவள்ளூருக்கு 12ம் தேதி மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு வருகை

திருவள்ளூர், நவ. 6: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவர் ஒய்.ஜவஹர் அலி மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வரும் 12 ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.  சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் அன்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சந்தித்து,  சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.

இதில், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் அனைவரும், மாநில சிறுபான்மையினர் ஆணையக்  குழுவினரை சந்தித்து, தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : State Minorities Commission Committee ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூரில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி