×

போக்குவரத்து கடும் பாதிப்பு செல்போன் டவர் அமைக்க நிலம் கொடுத்தவருக்கு வாடகை தராமல் இழுத்தடிப்பு

விருதுநகர், நவ.5:செல்போன் டவர் அமைக்க நிலம் கொடுத்தவருக்கு வாடகை  தரமால் ஏமாற்றுவதாக ஏடிசி இந்தியா நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அய்யனார்நகரை சேர்ந்தவர் சக்கரை. இவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், தனக்கு சொந்தமான 1.5 சென்ட் நிலம் அய்யனார் நகரில் உள்ளது. இந்த நிலத்தை ஏடிசி இந்தியா நிறுவனம் செல்போன் டவர் அமைப்பதற்காக வாடகைக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கி அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நிலத்திற்கு மாதம் ரூ.11 ஆயிரம் வாடகை, ரூ.70 ஆயிரம் அட்வான்ஸ் என பேசி உள்ளார். அதை தொடர்ந்து இவரின் நில ஆவணங்கள் ஏடிசி இந்தியா நிறுவனம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்காக ரூ.15 லட்சம் மதிப்பிலான கம்பங்களை போட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக வாடகை, அட்வான்ஸ் தராமல் நிறுவனம் ஏமாற்றுவதால் தனது 10 குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளா

Tags :
× RELATED செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால்...