×

கிருஷ்ணகிரி நகரத்தில் 10 அடிக்கு ஒரு மரண குழி

கிருஷ்ணகிரி.நவ.5:  கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரில் 10 அடிக்கு ஒரு பாதாள மரண குழி உள்ளதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரில் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், கோ-ஆப்ரேட்டிவ் காலனி குறுக்குத் தெரு, லண்டன் பேட்கடை, சப் ஜெயில் ரோடு, சேலம் ரோடு, பெங்களூர் ரோடு, சோமார் பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகள் அடங்கி உள்ளது.இங்கு நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டியும், சிறு சிறு கிணறுகள் போல் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் பாதி நடந்துள்ள நிலையில் சாக்கடை அமைத்து சில இடங்களில் மூடிகள் போட்டு மூடப்பட்டுள்ளது. இதில் ரோட்டின் உயரம் தற்போது உயர்ந்துள்ளதால், பாதாள சாக்கடை கிணறுகளின் மூடிகள் தாழ்ந்த நிலையில் உள்ளது. இதனால் 10 அடிக்கு ஒரு பாதாள மரண குழிகள் உள்ளன. இதில், நகரத்தின் முக்கிய பகுதிகளான மருத்துவமனைகள், பொதுமக்கள் குடியிருப்பு, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளன.

பல்வேறு பணிகள் நிமித்தமாக டூவீலர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் இந்த மரணக்குழியில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிதிலமடைந்து காணப்படும் சாலைகளை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் இதை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கண்டு உடன் சீரமைக்க கிருஷ்ணகிரி நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : death pit ,city ,Krishnagiri ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி