×

அடைகலாபுரம் கிராமத்தில் ேபார்வெல் அமைத்து குடிநீர் விநியோகம்

தேன்கனிக்கோட்டை, நவ. 5: தேன்கனிக்கோட்டை அருகே அடைகலாபுரம் கிராமத்திற்கு ₹1.50லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.தேன்கனிக்கோட்டை அருகே மல்லசந்திரம் ஊராட்சி அடைகலாபுரம் கிராமத்தில் குடிநீர் பிரச்னை நிலவுவதாக கிராம மக்கள் தளி.பிரகாஷ் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியில் ₹1.50லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆழ்துளை கிணறு பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வினியோகத்தை தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ பார்வையிட்டு மக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டார்.கிராமத்திற்கு சாலை மற்றும் பஸ் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலுரெட்டி, திவாகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  சீனிவாசன், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் முனிராஜ், பத்தியப்பா, சந்திரரெட்டி, முருகன், துரைசாமி, வெங்கடராஜ், ஒன்றிய இளைஞரணி தேவராஜ் அடைகலாபுரம் ஊர்கவுண்டர் ஜோசப், ஈசாக், பாலா, வின்சென்ட், ராயப்பா, பீட்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Adigalapuram Village ,
× RELATED 1,07,083 வாக்குகள் பெற்ற வித்யாராணி வீரப்பன்