×

பள்ளி வளாகத்தை பாராக மாற்றிய அவலம் குடிகாரர்களின் கூடாரமான கல்வி அலுவலகம்

பென்னாகரம், நவ.5: பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ெசயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக உமாராணி பணியாற்றி வருகிறார். இப்பள்ளி வளாகத்திலேயே பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் பள்ளி விடுமுறை நாட்களிலும், மாலை ேநரங்களிலும் அப்பகுதியைச் சேர்ந்த சில சமூக விரோதிகள்,  வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு அமர்ந்து, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போதை தலைக்கு ஏறும் நபர்கள், பள்ளி வளாகத்திலேயே மது பாட்டில்களை வீசி செல்வது, உடைப்பது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மறுநாள் பள்ளிக்கு வரும், மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடைந்த பாட்டில் துகல்கள் பள்ளி மாணவர்கள் விளையாடும் போது கால்களில் குத்தி காயமடைந்து வருகின்றனர். இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவே, பெற்றோர்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க, பென்னாகரம் போலீசார் தினமும் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மது அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : school premises ,school ,
× RELATED பள்ளி வளாகத்திற்குள் உலா வந்த காட்டுயானை