×

குண்டும், குழியுமாக மாறிய பாரதிபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை

தர்மபுரி, நவ.5: தர்மபுரி அருகே குண்டும், குழியுமான பாரதிபுரம் 60 அடி சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் 60 அடி ரோட்டில் வீடுகள், ஓட்டல்கள், அரசு போக்குவரத்து கழக பணி மனை, அரசு அரிசி குடோன் ஆகியன உள்ளன. இந்த சாலையில் அரிசி குடோனுக்கு செல்லும் 100க்கணக்கான லாரிகள் தினமும் ெசன்று வருகிறது. போலீஸ் குவார்ட்டர்ஸில் வசிப்பவர்களும், வெண்ணாம்பட்டிக்கு செல்பவர்களும் நடந்து செல்ல இந்த சாலையையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாரதிபுரம் 60 அடி தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், பைக்குகள், லாரிகள், பஸ்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Bharathipuram ,
× RELATED விருதுநகரில் பரிதாப நிலையில்...