×

மாவட்டம் முழுவதும் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நாமக்கல்,  நவ.5: நாமக்கல் மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழுமையான விவரங்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட புள்ளியியல் துறையின் மூலம், மின்னணு தொழில்நுட்ப  முறையில், மொபைல் ஆப் மூலம் 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி மாவட்டம்  முழுவதும் நடைபெறுகிறது. இந்த பணியை கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: பேப்பர்,  பேனா எதுவும் இல்லாமல், முழுவதும் மொபைல் ஆப் மூலம் பொது சேவை மைய  பணியாளர்களால் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில், வேளாண் பயிர்  உற்பத்தி தவிர மற்ற இதர பொருள்கள் உற்பத்தி, மின்சாரம், எரிவாயு,   கட்டுமானம், வணிகம் மற்றும் சேவை போன்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்கள்  சேகரிக்கப்படுகின்றது. பாதுகாப்பு நிறுவனங்கள், ராணுவ அமைப்புகள்,  பன்னாட்டு அமைப்புகள், வெளிநாட்டவரை மட்டுமே உறுப்பினராக கொண்ட  குடும்பங்கள், தொடர்ச்சியாக இடம்பெயரும் மக்கள் ஆகியோரின் விவரங்கள்  கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

பணியின்  காலம் மற்றும் துல்லியமான விவரங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு  முதல் முறையாக கணக்கெடுப்புப் பணி மின்னணு தொழில்நுட்ப முறையில் நடைபெற  உள்ளது. சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் நாட்டின் பொருளாதார நிலையை  அறிவதற்கும், எதிகாலத்திற்கான திட்டங்கள் தீட்டுவதற்கும், கல்வி  மேம்பாட்டுக்கும், புதியவகை மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள்  மற்றும் தொழில், சேவை நிறுவன உரிமையாளாகள், கணக்கெடுப்பாளர்கள் கேட்கும்  தொழில் பற்றிய வரவு-செலவு, மூலதனம், பான்அட்டை, ஆதார்அட்டை, ஓட்டுநர்  உரிமம் போன்ற அடையாள அட்டை விவரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில், புள்ளியியல் துணை இயக்குனர் சூரியகலா, கோட்டப் புள்ளியியல்  உதவி இயக்குனர் லட்சுமணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கவாசகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Launch ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...