×

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவிக்கு மாநில அளவில் சிறந்த சாதனையாளர் விருது

ராசிபுரம், நவ.5: முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவி, மாநில அளவில் சிறந்த சாதனையாளர் விருதினை தட்டிச் சென்றுள்ளார். மாணவ மாணவிகளின் தொழில்நுட்ப அறிவை ஊக்குவிக்கும் விதமாக, தி இன்ஸ்டியூசன் ஆப் இன்ஜினியர்ஸ்(இந்தியா) நிறுவனம் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளுக்கான போட்டியை நடத்தியது. இதில், முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த மணவி வனீதா 2019-2020ம் கல்வி ஆண்டின் சிறந்த மாணவி விருதினை தட்டிச் சென்றார். இந்நிறுவனமானது99 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் மாநில மற்றும் உள்ளூர் மையங்கள் மூலம் பல்வேறு தொழில்நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும்  சமூகசேவை மையங்கள் ஆகியவையுடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை சேவைகளை வழங்கி வருகிறது. சாதனை படைத்த மாணவிக்கு ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் தாளாளர், கந்தசாமி, செயலாளர், பேராசிரியர் குணசேகரன், இணைசெயலாளர் ராகுல், கல்லூரி முதல்வர், மாதேஸ்வரன், துறைத் தலைவர் சரவணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Muthayammal Engineering College Award Winner ,
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்