×

ஆத்தூர் அருகே கால்வாயில் பாய்ந்த கார்

ஆத்தூர், நவ.5: தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(50). இவர், நேற்று மாலை தனது காரை ஓட்டிக்கொண்டு ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தாண்டவராயபுரம் பகுதியில் வளைவில் திருப்பியபோது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கால்வாயில் கார் பாய்ந்தது. இதில் சாலையில் நின்று கொண்டிருந்த காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் லேசான காயம் அடைந்தார். காரில் பயணம் செய்த ராஜா காயமின்றி உயிர் தப்பினார். தொடர்ந்து, பள்ளத்தில் இறங்கிய காரை அங்கிருந்தவர்கள் டிராக்டர் மூலம் இழுத்து சாலையில் விட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : canal ,Attur ,
× RELATED கீழ்பவானி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து