×

ஓமலூர், இடைப்பாடியில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஓமலூர், நவ.5: டெல்லியில் வழக்கறிஞர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து ஓமலூர் மற்றும் இடைப்பாடி நீதிமன்றத்தில், வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தலைநகர் டெல்லியில் தீஸ்ஹசாரி என்ற நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வழக்கறிஞர்கள் பலர் போலீசாரால் தாக்கப்பட்டனர். தொடர்ந்து, ரஞ்சித்மாலிக் என்ற வழக்கறிஞர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். அதன்படி, நேற்று ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அனைத்து வழக்கறிஞர்களும், இடைப்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாள் முழுவதும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்ததால், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Tags : Omalur ,lawyers ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!