×

மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

இளம்பிள்ளை, நவ.5: மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் மணிமேகலா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு பிரதமரின் ஆதரவு நிதி ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப்புத்தக நகல், குடும்ப அட்டை நகல், பட்டா நகல் ஆகியவற்றை வரும் 8ம் தேதிக்குள் மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், இத்திட்டத்தில் இணைந்து முதல் மற்றும் 2ம் தவணை பெற்ற விவசாயிகள் 3வது தவணை பெறுவதற்கு ஆதார் மற்றும் வங்கி கணக்குப்புத்தக நகலை கொடுத்து, ஆதார் அட்டையில் உள்ளவாறு தங்களது பெயர் மற்றும் வங்கி கணக்கு எண்ணை திருத்தம் செய்து கொள்ள வேண்டும். 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் 60 வயதிற்கு பிறகு மாதம் ₹3 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இது தொடர்பாக அனைத்து கிராமங்களிலும் வேளாண்மைத்துறையினால் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அயோத்தியில் பலத்த பாதுகாப்பு நாளை...