×

தேசிய திறனாய்வு தேர்வு கடலூர் மாவட்டத்தில் 3,895 பேர் பங்கேற்பு

கடலூர், நவ. 5: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வை 3 ஆயிரத்து 895 மாணவ, மாணவிகள் எழுதினர்.மத்திய அரசின் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் மேற்கொண்டு 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற தேர்வில் கடலூரில் மட்டும் ஆறு மையங்களில் நடத்தப்பட்டது. தேர்வில் பங்கேற்க 4,151 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்த நிலையில் 3,895 பேர் பங்கேற்றனர். தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. காலை 9 மணி முதல் 11 மணி வரை அறிவுத்திறன் தேர்வும், மீண்டும் 11:30 மணி முதல் 1:30 வரை கல்வி திறன் தேர்வும் நடைபெற்றது. தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் மாணவருக்கான சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மையங்களை ஆய்வு செய்தார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு