×

மேலகுப்பம் கிராமத்தில் மூடிக்கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

நெய்வேலி, நவ. 5: நெய்வேலி அடுத்த அம்மேரி ஊராட்சியில் உள்ள மேலகுப்பம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார்  மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த  கிராமத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் வசதிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேலகுப்பம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் பொதுமக்களின் நலனுக்காக கட்டப்பட்டது. ஆனால் இந்த மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் எப்போதும் மூடியே கிடக்கிறது. அப்பகுதி பொதுமக்கள் மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க ஊராட்சி செயலாளரிடம் புகார் கூறியும் அவர் அதனை திறக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த சுகாதார வளாகத்தை சுற்றி செடிகள் முளைத்து புதர் மண்டி பூச்சிகள் தங்கும் இடமாகவும் மாறி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பாழாகி வரும் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர  கம்மாபுரம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Women's Health Complex ,village ,Melakuppam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...