×

ஏரியில் முட்புதர்களை அகற்றிய திமுக எம்எல்ஏ

பண்ருட்டி, நவ. 5: நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து ஏரிகளும் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இதனை அறிந்த சபா.ராேஜந்திரன் எம்எல்ஏ பொதுமக்கள் ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் என்எல்சி நிர்வாகம் மூலம் தூர்வார நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக கடந்த ஆண்டில் தூர்வாரப்பட்ட ஏரிகளில் தற்போது பெய்த மழைநீர் ஏரிகளில் நிரம்பி விவசாயிகளுக்கு உதவியது. அதுபோல் சொரத்தூர் ஏரியை என்எல்சி நிர்வாக உதவியுடன் கடந்த ஆண்டு தூர்வாரி சீரமைப்பு பணி செய்யப்பட்டது. தற்போது பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆனால் ஏரியில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து இருந்ததால் சபா.ராேஜந்திரன் எம்எல்ஏ ஏரியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஊராட்சி செயலர் சபா பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags : DMK MLA ,lake ,
× RELATED கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு