×

நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் தொழுதூர் அணைக்கட்டில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்

திட்டக்குடி, நவ. 5: தொழுதூர் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தற்போது தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த 2, 3 ஆகிய தேதிகள் பள்ளிகள் விடுமுறை என்பதால் நீர் நிலைகளில் சிறுவர்கள் அதிகளவில் குவிந்து அங்கு குளித்து மகிழ்ந்தனர். இதேபோன்று திட்டக்குடி அடுத்த ராமநத்தத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தொழுதூர் அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆனந்த குளியல் போட்டனர். பாதுகாப்பு இன்றி உள்ள அந்த அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் நீர்நிலை பகுதிக்கு குளிக்க செல்லக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Anand ,
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது