புழுதி பறக்கும் தார் சாலையால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி

உளுந்தூர்பேட்டை, நவ. 5: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நகர் ரயில்வே மேம்பாலம் வரையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் தார் சாலை போடப்பட்டது. இந்த தார் சாலை போடப்பட்டு சில மாதங்களிலேயே விருத்தாசலம் சாலை சந்திப்பில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை வரையில் உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக ஆனதுடன், புழுதி பறக்கும் சாலையாக மாறி உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியபோது, நெடுஞ்சாலை துறையின் சார்பில் இந்த சாலை போடப்பட்டு ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் குண்டும், குழியுமாக புழுதி பறக்கும் சாலையாக மாறியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது காற்றில் புழுதி அடிப்பதால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரமற்ற சாலையின் மேல் மீண்டும் தார் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>