×

ஒரே பயிரை சாகுபடி செய்யும் போது கால விரையம் தடுக்கப்படும்

வானூர், நவ. 5:  வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் கூட்டுப்பண்ணையை சாகுபடியினை வேளாண்மை துணை இயக்குநர் (ம.நி) கென்னடி ஜெயக்குமார் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, அரசு கூட்டுப்பண்ணைய சாகுபடி முறைகளை விவசாயிகள் முனைப்புடன் கடைபிடித்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான விதை முதல் அனைத்து இடுபொருட்களையும் மொத்த விலைக்கு வாங்கிடவும் உற்பத்தி செய்த பொருளை சில்லரை விலையில் விற்பனை செய்வதின் மூலம் விவசாயிகள் பயன்பெற முடியும். மேலும் விவசாயிகள் குழுவாக இணைந்து ஒரே பயிரை சாகுபடி செய்யும் பொழுது கால விரையம் தடுக்கப்பட்டு தொழில்நுட்ப பரிமாற்றங்கள் நடந்து சிறந்த மகசூலை பெற முடியும். விவசாயிகள் நடைமுறையில் செய்யப்படும் பண்ணையத்தில் மகசூல் ஒரே கிராமத்தில் உள்ள விவசாயிகளிடையே வேறுபடுகிறது.

 மேலும் இந்த மகசூல் இடைவெளி அதிகமாக உள்ளது. விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்படும்போது, தொழில்நுட்ப கலந்துரையாடல் ஏற்பட்டு இந்த மகசூல் இடைவெளி குறையும் என்று கூறினார். அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நேரடி நெல் விதைப்பு வயலினை ஆய்வு செய்து மேலும் நெல் வரப்புகளில் உளுந்து பயிர் விதைப்பு பணியினையும் பார்வையிட்டார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன், வட்டார வேளாண்மை அலுவலர் ரேவதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், உதவி மேலாளர் வீரமணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ரவிச்சந்திரன், தங்கம், ரேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Tags :
× RELATED இன்று கடைசி நாள் பயிர்காப்பீடு தேதியை நீட்டிக்க வேண்டும்