×

வில்லியனூர் பைபாஸ் சாலையில் 46 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்

வில்லியனூர், நவ. 5:   புதுச்சேரிக்கு அடுத்தபடியாக துணை நகரமாக வில்லியனூர் விளங்கி வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் பைபாஸ் சாலை, சங்கராபரணி ஆற்றங்கரை, சாலையோரங்களில் திருமண மண்டபங்களின் பிளாஸ்டிக் பைகள், வாழை இலை மற்றும் மரம், கோழி இறைச்சியின் கழிவுகள், இறக்கைகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.  இதுதொடர்பாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகரன், ைபபாஸ் சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கொம்யூன் பஞ்சாயத்துக்கு ேகாரிக்கை விடுத்திருந்தார். அதன்படி நேற்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் தலைமையில் பைபாஸ் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் 46 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

தொடர்ந்து வில்லியனூர் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப் குப்பைகள் அகற்றப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். இனிமேல் இப்பகுதியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சுற்றுப்புறத்தை சீர்குலைக்கும் வகையில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக  இன்று (5ம் தேதி) மாலை கொம்யூன் பஞ்சாயத்து  அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...