×

திருச்சியில் பக்கவாதநோய் குறித்து மருத்துவர்கள் கலந்தாய்வு

திருச்சி, நவ.5: திருச்சி சங்கம் ஓட்டலில் பக்கவாத நோயை தடுப்பது குறித்து மருத்துவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.இக்காலத்தில் பக்கவாதம் என்பது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு நோய் ஆகும். 4 ல் 1 நபர் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகிறார். மருத்துவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பக்கவாதத்தை குணப்படுத்தவும், தடுக்கவும் முடியும் என்பதை வலியுறுத்தியும் திருச்சி காவேரி மருத்துவமனை சார்பாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி சங்கம் ஓட்டலில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியை கிஆபெ. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியின் டீன் (பொறுப்பு) டாக்டர் அர்ஷிய பேகம் மற்றும் இந்தியன் மெடிக்கல் அஸோசியேசன் செயலாளர் டாக்டர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் துவங்கி வைத்தனர். காவேரி மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் ஜோஸ் ஜாஸபர் தலைமையில் பல்வேறு மருத்துவர்களின் கலந்தாய்வு நடைபெற்றது.

Tags : Doctors ,Trichy ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...