×

டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் திருச்சியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

திருச்சி, நவ.5: டெல்லியில் வக்கீல்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருச்சியில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.டெல்லியில் உள்ள ஹசாலி நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி வழக்கறிஞர்களை அங்கு பணியில் இருந்த போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். அதோடு வழக்கறிஞர்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வக்கீல்களை தாக்கிய போலீசாரை கண்டிக்கும் வகையில் நேற்று ஒரு நாள் தமிழக நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன்படி, திருச்சி மாவட்டத்தில் வக்கீல் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு செய்தனர். இந்த பணிப்புறக்கணிப்பில் 1,500க்கும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

லால்குடி: டெல்லி ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனங்கள் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் வக்கீல்களை போலீசார் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து லால்குடி கோர்ட் வக்கீல் சங்க தலைவர் கென்னடி தலைமையில், செயலாளர் சுதாகர் துணைத்தலைவர் சசிகுமார், பொருளாளர் மதியழகன், இணை செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலையில் 100க்கு மேற்பட்ட வக்கீல்கள் நேற்று ஒரு நாள் மட்டும் கோர்ட் புறகணிப்பில் ஈடுபட்டனர்.


Tags : Court ,lawyers ,Delhi ,
× RELATED பிகார் ஆளுநர் மாளிகையில் நடைபெறும்...