×

பள்ளி மாடியில் இருந்து குதித்து படுகாயம் மாணவிக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு

திருச்சி, நவ.5: திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள பள்ளியின் மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் நிவாரணம் வழங்க இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த ராக்கி எமல்சன் மகள் ஏஞ்சலின் லாரா ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி குறைந்த மதிப்பெண் எடுத்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகம் ஏற்படுத்திய மனஉளைச்சல் காரணமாக மாடியில் இருந்து குதித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவியின் சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் மாணவிக்கு இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சம் வழங்கிட வேண்டும். மாடியில் இருந்து குதிக்க காரணமான மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சேதுபதி தலைமையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags : student ,Collector ,
× RELATED ஆனைகட்டி மழைவாழ் மக்கள் கோவை கலெக்டரிடம் மனு