×

பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கு 6 பேரிடம் தீவிர விசாரணை துப்பு கிடைக்காமல் திணறல்

திருவெறும்பூர், நவ.5: திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43கோடி கொள்ளை போன வழக்கில் 6 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் மூன்று பேரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் பெல் தொழிலாளர் கூட்டுறவு சங்க வங்கிகள் செயல்படுகிறது. 24வது கட்டிடத்தில் நிர்வாக அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. அதில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கடந்த 31ம் தேதி வைத்திருந்த ஒரு கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் பணம் ெகாள்ளை போனது. இச்சம்பவம் குறித்து கூட்டுறவு வங்கி மேலாளர் மனுநீதிசோழன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்கள் உட்பட 6 பேரை பிடித்து மூன்று நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர். எஸ்பி தொடர்ந்து விசாரித்து வருகிறார். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.இந்நிலையில் டிஐஜி பாலகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் அங்கு வந்து 6 பேரிடமும் விசாரணை நடத்தினார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வங்கி ஊழியர் ரவிசந்திரன், நவல்பட்டு புது தெருவை சேர்ந்த கிருஷ்ணவேணி, ஒப்பந்த ஊழியர் ஜோசப் ஆகியோரை விடுவித்தனர். போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது உடனடியாக ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையின்படி விடுவித்ததாக ேபாலீசார் ெதரிவித்தனர்.இந்த கொள்ளையில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். தொடர்ந்து 3 பேரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...