பொன்னமராவதியில் குருதி கொடையாளர்களுக்கு விருது

பொன்னமராவதி, நவ.5: பொன்னமராவதி குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.பொன்னமராவதி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் எழுச்சி மன்றம் மற்றும்  பிரசன்னா ரத்த தானம் நண்பர்கள் இணைந்து நடத்தப்பட்ட குருதி கொடையாளர் பாராட்டு விருது விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா சரவணன் தலைமை வகித்தார். வலையபட்டி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் செந்தமிழ்செல்வி, மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்குமார் 60 குருதி கொடையாளர்கள் 5-மருத்துவர்கள் உட்பட 70பேருக்கு விருது வழங்கினர். துர்கா மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அழகேசன், கவிஞர் பெர்னாட்ஷா, சக்தி மாதர் உறுப்பினர்கள், குருதி கொடையாளர்கள், தொழிலதிபர் வைத்திநாதன் செந்தில்குமார், மலேசியாவை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் சங்கையா, .ராகவேந்திரா பவுண்டேசன் மெடிக்கல் சேர்மன் கருணாகரன், மிராசு மோகன், ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக மன்ற அமைப்பாளர் பாஸ்கர் வரவேற்றார்.

முடிவில் கவிஞர் பெர்னாட்ஷா நன்றி கூறினார்.

Related Stories:

>