×

கீரனூர் பேரூராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

புதுக்கோட்டை, நவ.5: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் கீரனூர் பேரூராட்சியும் உள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்களில் பல தெருக்கள் உள்ளது. மேலும் புதுக்கோட்டை- திருச்சியின் மையப்பகுதி என்பதால் மாநில நெடுஞ்சாலைகள் கீரனூர் பேரூராட்சி பகுதிகள் வந்து செல்கிறது.
இேதபோல் கீரனூர் நகர் பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களை இணைக்க பல இணைப்பு சாலைகளும் உள்ளது. இந்நிலையில் இந்த சாலைகள் போதிய பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து செல்கின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் தாங்கள் ஓட்டி செல்லும் சைக்களில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக கீரனூரில் அமைந்துள்ள கோர்ட், தாலுகா அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்களுக்கு செல்லும் அதிகாரிகளின் கார்கள் இந்த குண்டும் குழியுமான சாலையில் தவழ்ந்துதான் செல்கிறது. இந்த சாலையில் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்வது வாடிக்கையாக மாறிவிட்டது. இதனால் கீரனூர் நகர் பகுதியில் அமைந்துள்ள சாலையை விரைந்து சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:கீரனூர் பேரூராட்சியில் பள்ளிகள், கோர்ட், கரூவூலம் உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து சாலையை சீர் செய்ய வேண்டும் என்றனர்.

Tags : roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...