பொன்னமராவதியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

பொன்னமராவதி, நவ.5: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி சிதம்பரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது.முகாமிற்கு பள்ளி முதல்வர் முருகேசன் தலைமை வகித்தார். பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சண்முகம் நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் தியாராஜன் சுகாதார விழிப்புணர்வு குறித்து விளக்கிப் பேசினார். பள்ளியின் தனி அலுவலர் சந்திரன், துணைமுதல்வர்கள் வைதேகி, கலைமதி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வலையபட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவுடன் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.


Tags : school children ,Ponnamaravathi ,
× RELATED பாமக நோட்டீஸ் விநியோகம்