×

மருதுபாண்டியர் குருபூஜை விழாவையொட்டி மணமேல்குடியில் மாட்டுவண்டி பந்தயம் 3 பிரிவுகளாக நடந்தது

மணமேல்குடி, நவ.5:மணமேல்குடியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.மருதுபாண்டியர் குருபூஜை, முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு மணமேல்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு பிரிவில் முதலாவதாக வந்த அவணியாபுரம் மோகன்சாமி சாமிகுமார், புதுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாட்டுவண்டியின் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரத்து 218ம், 2-வதாக வந்த மருங்கூர் முகமது, வௌ்ளுர் நரேஷ்தேவர் மாட்டுவண்டியின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்து 218ம், 3வதாக வந்த இடையாத்திமங்கலம் மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரத்து 218-ம், 4வதாக வந்த தினையாகுடி ஆர்.கே. சிவா மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரத்து 218ம் பரிசாக வழங்கப்பட்டன.நடுமாடு பிரிவில் முதலாவதாக வந்த வௌ்ளுர் அய்யப்பன் சேர்வை மாட்டுவண்டியின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரத்து 218ம், 2வதாக வந்த திருச்சி கிளியூர் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரத்து 218-ம், 3வதாக வந்த சின்னமனூர் மாட்டுவண்டியின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரத்து 218ம், 4வதாக வந்த பீர்க்கலைக்காடு மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரத்து 218ம் பரிசாக வழங்கப்பட்டன. கரிச்சான் மாடு பிரிவில் கலந்துகொள்ள அதிக மாட்டுவண்டிகள் பதிவு செய்யப்பட்டதால், பந்தயம் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு, பரிசுகள் பகிர்ந்து வழங்கப்பட்டன. கரிச்சான்மாடு முதல் பிரிவில் முதலாவதாக தினையாகுடி ஆர்.கே.சிவா, 2-வதாக அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் அம்பலம், 3வதாக கழுகுமனை பெரியதம்பித்தேவர், 4வதாக நல்லாங்குடி சசிக்குமார் மாட்டு வண்டிகள் வந்தன.

கரிச்சான்மாடு 2வது பிரிவில் முதலாவதாக நாட்டாணிக்கோட்டை பாலு, 2வதாக பொய்கைவயல் முத்துக்கருப்பர் மாட்டு வண்டியும், 3வதாக மருங்கூர் நாச்சியார், 4வதாக சொக்கலிங்கபுதூர் சக்தி மாட்டுவண்டிகள் வந்தன. கரிச்சான்மாடு பிரிவில் பரிசுபெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் சுழற்கோப்பை, வௌ்ளிநாணயம், மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறந்தாங்கி தொகுதி, மணமேல்குடி ஒன்றிய அகமுடையார் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர். மணமேல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Tags : race ,ceremony ,Maruthupandiyar Kurupujai ,Manthulkudi Kattuvandi ,
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி