×

மணமேல்குடி அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கியிருந்த கடல் அட்டை, பல்லிகள் பறிமுதல் மூட்டை மூட்டையாக சிக்கியது

மணமேல்குடி, நவ.5: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்படிணத்தில் ஹாஜிஅலி என்பவரது வீட்டில் இலங்கைக்கு கடத்து வதற்காக பதுக்கிவைக்கப்படிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை மற்றும் பல்லிகளை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் பறிமுதல் செய்தது.கோட்டைப்படினத்தில் ரஹ்மத் நகரில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் பல்லிகள் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து திருப்புன2வாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி மற்றும் காவலர்கள் மணிகண்டன், ரெங்கநாதன், ஐயப்பன், ஆகியோருடன் கோட்டைப்பட்டிணம் ரஹ்மத் நகரில் ஹாஜிஅலி (55) என்பரது வீட்டின் பின்புறம் சோதனை செய்தபோது பதப்படுத்தப்பட்ட கடல் பல்லிகள் சுமார் (32) கி.கி எடை கொண்டது. 18 ஆயிரம் எண்ணிக்கை கொண்டது. 6 சாக்கு மூட்டையில் இருந்தது. அதன் பதிப்பு சுமார் 5 லட்சமாகும். சாக்கு மூட்டையில் இருந்த கடல் பல்லிகள் கைப்பற்றப்பட்ட கடல் பல்லிகளை மேல் நடவடிக்கைக்காக அறந்தாங்கி வனச்சரக அலுவலர் ராஜசேகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Sri Lanka ,Manamalgudi ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...