×

திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்கு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் முடிவு

அரியலூர், நவ. 5: தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் பல நாடுகளில் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலை அவமதிப்பு என்பதை தாண்டி உலகம் போற்றும் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு உரிய நடவடிக்கையை தஞ்சை கலெக்டர் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சதிகாரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags : Office ,All India People's Movement ,Tanjore Collector ,SSA ,Thiruvalluvar ,
× RELATED காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடல்