×

பெரம்பலூர். அரியலூர் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி

பெரம்பலூர்,நவ.5: பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் தொடர்ந்து கைவரி சை காட்டிய கொள்ளையர்கள் வி.களத்தூர் போலீசார் விரித்த வலையில் சிக்கினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (52).வேப்பந்தட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (42). இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவ ரிடம் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 செல் போன்களை பறித்துச் சென்றனர்.பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இவர்களைப்பிடிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் வி.களத்தூர் எஸ்ஐ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் வேட்டை நடந்து வந்தது. தனிப்படை நடத்திய விசாரணையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(34) மற்றும் கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையைச் சேர்ந்த ரத்தினகிரீஸ்வரர்(24)ஆகியோரைத் தனிப்படை போ லீசார் கைதுசெய்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் துருவித்துருவி நடத்திய விசாரணையில் இவர்கள் கூட்டு சேர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் கூட் டுக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

குறிப்பாக வேப்பந்தட்டை தாலுக்கா எறையூர் சின்னாரு பகுதியில் சைக்கி ளில் சென்ற பெண்ணிடம் செயினை பறித்தது. அரி யலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகர் பாளையத்தில் டாஸ்மாக் மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடித்தது. இதுபோல் கொள்ளையடித்த நகைகளை தஞ்சாவூரில் விற்பனை செய்ததும், பசும்பலூர் மணிவண்ணன் தம்பதி யிடம் பறித்துசென்ற செல்போன்களைத் திருச்சியில் உள்ள ஒரு கடையில் விற்பனைசெய்தது விசாரணையில் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து கடை யில் விற்கப்பட்ட செல்போனையும், நகைகளையும் மீட்டு வந்த தனிப்படையி னர், கொள்ளையர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனை ஒட்டி தனிப்படை போலீசாருக்கு பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Tags : policemen ,theft ,Ariyalur Districts ,
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...