×

அரியலூர் நீதிமன்றத்தில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

அரியலூர், நவ. 5: அரியலூர் - நீதிமன்றத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
அரியலூர் நீதிமன்ற டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்றது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை வகித்து நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : court ,Ariyalur ,
× RELATED கல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்