×

அம்மா மருந்தகத்தில் 20% தள்ளுபடி விற்பனை

நெல்லை, நவ. 5: நெல்லை கூட்டுறவு பேரங்காடியில் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமையில் பொது மேலாளர் காந்திமதி முன்னிலையில் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.  மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தல். பேரங்காடி மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான வண்ணார்பேட்டை புறவழிச் சாலை யில் உள்ள கிட்டங்கி முகப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையை நிறுவ உரிய அனுமதிபெற்று நிறுவிய பின்னர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை அழைத்து திறப்பு விழா நடத்துவது.  அம்மா மருந்தகத்தில் 20 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது. பேரங்காடி தலைமை கட்டிட முன்பகுதியில் பண்ணை பசுமை காய்கறிகள் விற்பனை, பலசரக்கு மற்றும் அழகுசாதன சுயசேவை பிரிவை புதிதாக அமைக்க கூட்டுறவு பதிவாளரிடம் அனுமதிகோரி புதிய கட்டிடம் கட்டி செயல்படுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா