×

கடையம் வில்வவனநாதர் ேகாயிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

கடையம், நவ. 5: கடையம் வில்வவனநாதர் - நித்ய கல்யாணி அம்பாள் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.கடையம் வில்வவனநாதர் நித்ய கல்யாணி அம்பாள் கோயிலில் கடந்த 28ம் தேதி முதல் சூரசம்ஹார விழா துவங்கி நடந்தது. கடந்த 2ம் தேதி சம்ஹார விழாவினை தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாண விழா சேனைத்தலைவர் சமுதாயம் சார்பில் நடந்தது.காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு ஹோமமும் அதனைதொடர்ந்து சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வயானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. பின்னர் திருக்கல்யாணத்தினை சுந்தரபட்டர் நடத்தினார்.

பணி நிறைவு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் ரத்தினம் மேற்பார்வையில், கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் பழனிக்குமார், செங்கோட்டை அரசு மருத்துவர் டாக்டர் இந்துமதி, கடையம் சேனைத்தலைவர் சமுதாய தலைவர் இசக்கி, பணிநிறைவு மின்வாரிய அலுவலர் முருகன், தெற்கு கடையம் ஊராட்சி மன்ற செயலர் பழனி, முகவர் இசக்கிராஜா, சிவந்திபுரம் ஜெய்சிதம்பரம் பாரத்கேஸ் ஏஜென்சி உரிமையாளர் குமார், தமிழ்ச்செல்வி குமார், ஐயப்பன், கடையம் பஞ். முன்னாள் துணை தலைவர் ரவி, சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி கிருஷ்ணன், கடையம் சண்முகவிலாஸ் பாலாஜி ரங்கா (எ) ஆண்டபெருமாள், பில்டிங் காண்டிராக்டர் ஐயப்பன், கடையம் சத்திரம் பாரதி மேனிலைப்பள்ளி ஆசிரியர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். திருக்கல்யாண வைபவ ஏற்பாடுகளை கடையம் சேனைத்தலைவர்சமுதாயத்தினர் செய்திருந்தனர்.Tags : Subramanya Swamy Thirukkalil ,Valayavanathar Kayil ,
× RELATED பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் மீட்பு