×

பள்ளி மாணவர்களுக்கு சீருடை ஞானதிரவியம் எம்பி வழங்கினார்

நெல்லை, நவ. 5: ராதா
புரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்.ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான திருவம்பலாபுரம், சிதம்பராபுரம், கஸ்தூரிரெங்கபுரம், ராதாபுரம், சவுந்திரபாண்டியபுரம், உதயத்தூர், பரமேஸ்வரபுரம், கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கினார்.  நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் விஎஸ்ஆர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் அகஸ்டின், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார், ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், தனபால், விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி மார்த்தாண்டம், திசையன்விளை ரமேஷ், கோகுல், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : Gnanadiraviyam MB ,school children ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்