×

முன்னோர் தானமாக வழங்கிய கோயில் நிலத்தை விற்க இந்து முன்னணி எதிர்ப்பு

நெல்லை, நவ. 5: முன்னோர்கள் கோயிலுக்கு தானமாக வழங்கிய நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணியினர் கலெக்டரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: நெல்லை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமையான ஆலயங்கள் உள்ளன.  ஆலய பராமரிப்பு, பூஜைகள் போன்றவற்றிற்காக முன்னோர்களால் ஆலயத்தில் இருந்து சுவாமி பெயரில் ஆலயங்களின் நிலங்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களாகும். அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல.

 சமீபத்தில் அரசு ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்பனை செய்யவும் அரசாணை பிறப்பித்துள்ளது. பக்தர்களுக்கு இது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுக சாமி, மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பிரமநாயகம், மாவட்ட நிர்வாகிகள் துர்க்கை முத்து, சாக்ரடீஸ், சங்கர், சிவா, சுடலை, செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Front ,protests ,sale ,ancestors ,temple land ,
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...