×

உவரி அருகே கார், மினி லாரி மோதல்

திசையன்விளை, நவ. 5:  கூட்டப்பனையில் இருந்து நேற்று மதியம் மீன்கள் ஏற்றிவந்த மினிலாரி கன்னியாகுமரி அடுத்த சின்ன முட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. அதே வேளையில் கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருந்த கார், உவரி அடுத்த காரிகோவில் விலக்கு பகுதியில் வந்துகொண்டிருந்தது. இதில் எதிர்பாராதவிதமாக காரும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு கவிழ்ந் விபத்துக்கு உள்ளாகின. மினி லாரியில் இருந்த மீன்கள் சாலை முழுவதும் சிதறின. மேலும்  கார் டிரைவர் மற்றும் காரில் பயணித்த 3 பெண்களும் பலத்த காயமடைந்தனர். விரைந்துவந்த திசையன்விளை தீயணைப்பு துறையினர் இவர்களை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து உவரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uvari ,
× RELATED நெல்லை நா.த.க. வேட்பாளர் மீது வழக்கு