×

சாந்தி மருத்துவமனை திறப்பு விழா செயின்ட் மேரிஸ் கல்லூரியினர் வாழ்த்து

செங்கோட்டை, நவ. 5:  தென்காசி சாந்தி மருத்துவமனை நிர்வாகிகளுக்கு  தேன்பொத்தை செயின்ட் மேரிஸ் ஹெல்த் அண்ட் சயின்ஸ் கல்லூரியினர் வாழ்த்துத் தெரிவித்தனர். தென்காசியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சாந்தி மருத்துவமனை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள்  என ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து  செங்கோட்டை அடுத்த தேன்பொத்தையை சேர்ந்த செயின்ட் மேரிஸ் ஹெல்த் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் தாளாளர் பினு, மேலாளர் ஜோஸ் அந்தோணி, கல்லூரி துணை முதல்வர் சுஜித் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் சாந்தி மருத்துவமனையின் உரிமையாளர்கள் டேவிட் செல்லத்துரை, சாந்தி மற்றும் டாக்டர்கள் தமிழரசன், அன்பரசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : St. Mary's College Greetings ,
× RELATED பாவூர்சத்திரம் வென்னிமலை கோயிலில் இன்று வருஷாபிஷேகம்