×

கரூர் வெங்கமேடு துணை சுகாதார நிலைய வளாகத்தில் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் கூரை பந்தல்

கரூர், நவ. 5: கரூர் வெங்கமேடு 7வது வார்டு பகுதியில் துணை சுகாதார நிலைய வளாகம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூரைப்பந்தல் தற்போது விழும் நிலையில் மோசமாக உள்ளது. நோயாளிகள் வந்து செல்லும் இந்த வளாகத்தில் மோசமான நிலையில் உள்ள இதனை உடனடியாக அகற்றி சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் துணை சுகாதார வளாகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரும் ஆங்காங்கே பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனடியாக அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Roof collapse ,Karur Venkamedu ,
× RELATED ஹைதராபாத்தில் மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3பேர் உயிரிழப்பு