உப்பிடமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி அருகில் தேங்கி நிற்கும் மழை நீரால் மாணவர்கள் அவதி

கரூர், நவ. 5: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பகுதியை சுற்றிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பள்ளி அருகே குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது. அதிகளவு மாணவ, மாணவிகள் வந்து செல்லும் நிலையில் பள்ளிக்கு எதிரே தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதோடு, இனி வரும் மழைக்காலங்களின் போது மழை நீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>