×

கரூர் மாவட்டத்தில் 1,930 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டது கலெக்டர் தகவல்

கரூர், நவ. 5: கரூர் மாவட்டத்தில் 1930 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றவும், பாதுகாப்பாக மூடவும் வேண்டும் என்ற முதல்வர் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்கும்பணி கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நகராட்சிகளின் அலுவலரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 12082 ஆழ்குழாய்கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 9695 ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள 2387 ஆழ்குழாய்கிணறுகள் பயன்பாட்டில் இல்லை. இகைளில் 1877 கிணறுகள் சம்பந்தப்பட்ட பகுதிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் தொடர் ஆய்வு செய்து பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது. மேலும் 510குழாய் கிணறுகள் மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரூர் நகராட்சியில் 686 ஆழ்துளை கிணறுகளில் 662 பயன்பாட்டில் உள்ளன. 24 கிணறுகள் பயன்பாட்டில் இல்லை. 24ல் 5 கிணறுகள்மூடப்பட்டு மீதம் உள்ள 19 கிணறுகள் மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. குளித்தலையில் 223 கிணறுகளில் 194 பாதுகாப்பான முறையில் உள்ளது. பயன்பாட்டில் இல்லாத 29 கிணறுகளும் மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல் அறிந்தால் அந்தபகுதிக்கான வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, கிராம நிர்வாக அலுவலரிடமோ, ஊராட்சி செயலரிடமோ தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : wells ,district ,Karur ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்