×

வெங்கமேடு விஏஓ அலுவலகம் எதிரில் சின்டெக்ஸ் தொட்டி பழுதடைந்து தண்ணீர் கசிவால் மக்கள் அவதி

கரூர், நவ. 5: கரூர் நகராட்சி வெங்கமேடு விஏஒ அலுவலகம் எதிரே பழுதடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் வெங்கமேடு மீன் மார்க்கெட் வளாக பின்புறம் விஏஒ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் எதிர்ப்புறம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங்க் உள்ளது. இந்த டேங்க் பயன்பாட்டில் இருந்தாலும் பல இடங்களில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருவதோடு டேங்கில் உள்ள குழாய்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் எந்த நேரமும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு விஏஒ அலுவலகம் வரை செல்கிறது.

தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவதால் தண்ணீர் கசிவு காரணமாக கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சின்டெக்ஸ் டேங்கினை சீரமைத்து புதிதாக பைப் மற்றும் குழாய் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த டேங்கினை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : office ,Venkamedu VAO ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...