×

ஊழல் எதிர்ப்பு தின உறுதிமொழி

தேனி, நவ. 5: ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தையொட்டி தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி மொழி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஸ்ரீதர், இணைச்செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயராமன், பள்ளி முதல்வர் மீனாகுமாரி முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தேனி கனரா வங்கியின் மேலாளர் இளங்கோவன்  பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் அனைவரும் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தனர்.

Tags :
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...