×

கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வாய்க்கால்களில் கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்ததால் பரபரப்பு

கரூர், நவ. 5: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பாசன வாய்க்கால்களில் கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்திய குடியரசு கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் ஏராளமானோர் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் வேட்டமங்கலம் கிராமம் நத்தமேடு குந்தாணிபாளையம் பகுதியில் வசிக்கும் டொம்பர் சமூக மக்களுக்கு வழங்குவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகள் உறுதி செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன்பேரில் பட்டா வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

புகழூர் வாய்க்கால், வாங்கல், நெரூர், வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில் சுப்பிரமணியன், விஜயன், விசுவநாதன், பழனிச்சாமி அளித்த மனு:
காகிதஆலை நிறுவனம் 35ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. கரும்புச்சக்கை, மரக்கூழ் கழவுநீரானது அய்யம்பாளையம் பேரூராட்சி அருகில் புகழூரான் வாயக்கால் வடிவு நீர் வாங்கல் வாய்க்கால், நெரூரான் வாய்க்காலில் கலந்து நெரூர் வரை காவிரியாற்றில் செல்கிறது. தோட்டக்குறிச்சி கிராமத்தில் இருந்து நெரூர் வரை உள்ள வளமான பொன்விளையும் பூமியெல்லாம் வாழை, மஞ்சள், கரும்பு, நெல், வெற்றிலை என விளைந்தது. இன்றைக்கு கோரை விளையும் உவர் நிலமாக மாறி விட்டது. கோர்ட்டு கமிட்டி கழிவு நீரை விடக்கூடாது என ஆணை பிறப்பித்தது. ஆலைக்குள்ளேயே தான் மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதனை மீறி வாய்க்காலில் கலக்கிறது. இதனால் வாய்க்காலுக்கு வரும் நீர் பாசனத்திற்கு வரவில்லை. பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை மனு அளித்தோம். கலெக்டர் வருவாய்த்துறையினரிடமும் மனு கொடுத்தும் பயனில்லை. இந்த பாதிப்புக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தருவதோடு இனி கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அரங்கநாதம்பேட்டை ஞானசேகர் அளித்த மனுவில், நெரூர் தென்பாகம் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் காசிவிசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் நான்குரோடுகள் சந்திக்கின்றன. இதன் மெயின்சாலை கரூரில் இருந்து நெரூருக்கு செல்லும் சாலையாகும். இந்த சாலை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி பூஜை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, வியாழன் அன்று நடைபெறும் குருவார பூஜைக்கு ஏரளமானோர் வந்து செல்கின்றனர். வேகத்தடைஅமைத்து விபத்து தடுக்க பொதுப்பணித்துறையிடம் கேட்டபோது, கலெக்டர் அனுமதி பெறவேண்டும் என்கின்றனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பாக விபத்தின்றி வந்து செல்ல 4 இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : meeting ,collector ,office ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...