×

தேனி நகர் மெயின் ரோட்டில் திறந்தே கிடக்கும் மின்பாக்ஸ்

தேனி, நவ.5: தேனி நகர் பெரியகுளம் ரோட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில்வே கேட் அருகில் மின்சார கம்பத்தில் பிளக் பாக்ஸ் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி நகரின் முக்கிய பகுதியாக பெரியகுளம் சாலை, கம்பம் சாலை, மதுரை சாலை உள்ளது. இதில் பெரியகுளம் சாலையில் வாரச்சந்தை, மொத்த பலசரக்குக் கடைகள், வீட்டு உபயோக சாமான்களுக்கான மாநில அளவில் பிரபலமான வர்த்தக நிறுவனங்களின் கிளை நிறுவனங்கள், ஜூவல்லரி கடைகள், பிரபல ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இதனால் இச்சாலையில் எப்போது போக்குவரத்து நெரிசல் அதிக உள்ளது. தேனி நகர் பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் அருகே பெத்தாட்சிகோயிலை அடுத்து பெரியகுளம் வழித்தடத்தில் செல்லும் பஸ்களுக்கான பஸ் நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் எப்போதும் பஸ்சுக்காக பயணிகள்  காத்திருப்பது வழக்கம். இந்த பஸ் நிறுத்தத்தின் அருகே  உள்ள மின்கம்பத்தில் பிளக் பாக்ஸ்  எப்போதும் திறந்தநிலையிலேயே உள்ளது.

இந்த பஸ் நிறுத்தம்  அருகே பயணிகள் காத்திருக்கும்போது, பெற்றோருடன் வரும் சிறுவர்கள் விளையாட்டாக திறந்து கிடக்கும் மின்சார பாக்ஸ்சில் கைவைக்கும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோன்ற நிலையில் உயிர்பலி ஏற்பட அதிகவாய்ப்புள்ளது.
எனவே, மின்சார வாரிய நிர்வாகம் திறந்து கிடக்கும் மின்சார பீஸ்கேரியரியருடன் கூடிய பிளக் பாக்சை மூடிபோட்டு மூடிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Minbox ,Theni Nagar Main Road ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு