×

ஆமைவேகத்தில் டிஆர்டிஏ ஒருங்கிணைந்த வளாக கட்டுமானப்பணி

தேனி, நவ. 5:  தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கான அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. இதேபோல ஊரக வளர்ச்சித் துறைக்குட்பட்ட மகளிர் திட்ட அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம்  உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளது. இவ்வலுவலகங்களை ஒரே கட்டிட வளாகத்தில் கொண்டு வரும் வகையில் ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்படி, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில்  சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பாக உள்ள காலியிடத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்விடத்தில் கட்டுமானப்பணிகள்  கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இப்பணிகள் துவங்கி ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் பணிகள் முழுமைபெறவில்லை. ஊரகவளர்ச்சித் துறைக்கு வருவோர் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, இக்கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஊரகவளர்ச்சித் துறை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : TRDA ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...