×

மயிலாடும்பாறை அருகே முருங்கை பீன்ஸ் விவசாய பணி தீவிரம்

வருசநாடு, நவ.5: மயிலாடும்பாறை அருகே மூலக்கடை, கருப்பையாபுரம், ஆத்துக்காடு, பின்னதேவன்பட்டி, சோலைதேவன்பட்டி, ஆட்டுப்பாறை உள்ளிட்ட கிராமங்களில் முருங்கை பீன்ஸ் விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கிலோ ஒன்றுக்கு 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் வரை விலை போகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் முருங்கை பீன்ஸ் வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக  கடமலைக்குண்டு வேளாண்மைதுறை மற்றும் தோட்டக்கலைத்துறை  அலுவலகத்தின் சார்பில் மானியவிலை அடிப்படையில் உரம், பூச்சி மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் பீன்ஸ் அறுவடை செய்யும் விவசாய நிலங்களுக்குச் சென்று விழிப்புணர்வு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Mayiladuthurai ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது