×

அடிக்கடி நிலச்சரிவு கேள்விக்குறியான மூணாறு லாக்காடு கேப் சாலை மாற்றுப்பாதை அமைக்க மக்கள் வலியுறுத்தல்

மூணாறு, நவ.5: மூணாறில் நிலச்சரிவு மூலம் தகர்ந்த லாக்காடு கேப் சாலை சீரமைக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் மாற்றுப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி ரூ.381 கோடி செலவில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூணாறில் இருந்து தமிழ்நாடு செல்லும் லாக்காடு கேப் சாலையில் கனமழை மூலம் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் போர்க்கால அடிப்படியில் சாலைகளை சரிசெய்து போக்குவரத்து துவங்கப்பட்டது.இந்நிலையில் அக்.8ம் தேதி இப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பேர் பலியாயினர். இதில் உதயா(19)என்பவரது உடல் எடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் உடல் தற்போது வரை கிடைக்கவில்லை. மேலும் சாலை பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் சின்னக்கானல், பெரியகானல், சூரியநல்லி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மூணாறில் இருந்து பழைய தேவிகுளம் வழியாக சின்னக்கானல் சென்றடையும் சாலையை சீரமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கேப் சாலையில் பணிகள் நடைபெற காலதாமதம் ஏற்படுவதால் மூணாறு-தேனி செல்லும் மாற்றுப்பாதையை தேசிய நெடுஞ்சாலையாக அமைக்க ராஜகாடு, ராஜகுமாரி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போராட்டத்தில் இறங்க போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : landslide questioning ,detour ,Munnar ,Cape Road ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...