×

டெங்கு காய்ச்சலை தடுக்க திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் பெரியகருப்பன் எம்எல்ஏ வழங்கினார்

திருப்புத்தூர், நவ.5:  திருப்புத்தூரில் திமுக சார்பில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் தொடர் மழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்ட திமுக மருத்துவரணி சார்பாக, நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும் மற்றும் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், சிவகங்கை மாவட்ட செயலாளருமான கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை வழங்கினார் முகாமில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் குமரேசன், திருப்புத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் சண்முகவடிவேல், கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், துணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயசண்முகம், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜிம்கண்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.புதூர் கண்ணன், மாவட்ட வர்த்தக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் பாண்டியன், துரைசரவணன், நகர் செயலாளர் கார்த்திகேயன், நகர் அவைத்தலைவர் இராமரவி, நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் காளிமுத்து உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : MLA ,DMK ,
× RELATED மாநகரில் பரவும் டெங்கு காய்ச்சல்