திருப்புவனத்தில் கனமழைக்கு 3 வீடுகள் இடிந்தன

திருப்புவனம், நவ.5: திருப்புவனத்தில் பலத்த மழையின் காரணமாக வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  

திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாயப்  பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தில் சமயமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கனமழையின்போது இவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்த பகுதியில் பொருள்கள் மட்டுமே இருந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோன்று அந்த கிராமத்தில் உள்ள சமையன், ஆறுமுகம் என்பவர்களது வீடுகளும் சேதமடைந்தன.

Related Stories:

>